நில்லா கிராம் குக்
நில்லா கிராம் குக் (Nilla Cram Cook; திசம்பர் 21, 1908 - அக்டோபர் 11, 1982), நிலா நாகினி தேவி (Nila Nagini Devi) என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் அமெரிக்க எழுத்தாளரும், மொழியியலாளரும், மொழிபெயர்ப்பாளரும், கலைப் புரவலரும் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]நில்லா கிராம் குக் அயோவாவின் தெவான்போர்டில் நாடக ஆசிரியர் ஜார்ஜ் கிராம் குக் - அவரது இரண்டாவது மனைவியான, பத்திரிகையாளர் மோலி அனஸ்தேசியா பிரைஸ் ஆகியோருக்கு பிறந்தார். இவரது தந்தையும் மாற்றாந்தாயுமான சூசன் கிளாஸ்பெல் இவரை மொழியையும், கலாச்சாரத்தையும் படிக்க கிரேக்கத்துக்கு அழைத்து வந்தனர்.[1][2]
தொழில்
[தொகு]1931ஆம் ஆண்டில், குக் தனது கணவரை கிரேக்கத்தில் விட்டுவிட்டு தனது இளம் மகனுடன் காஷ்மீருக்கு வந்தார். அங்கு இவர் காந்தியைப் பின்பற்றுபவராக ஆனார்.[3] [4] இவர் இந்து மதத்திற்கு மாறி,[5] சமசுகிருதம், இந்தி பாரசீக இலக்கியங்களைப் படித்தார். மொட்டையடிக்கப்பட்ட தலையுடனும் வெறுங்காலுடன்,[6] [7] இவர் காந்தியின் ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.[8] 1934 இல் இவர் மீது ஒரு வாகனம் மோதிய காரணத்தால்[9] கொகல்கத்தாவில் ஒரு மருத்துவமனையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சி மேற்கொண்டார்.[10] [11] பின்னர் தனது மகனுடன் அமெரிக்காவுக்குத் திரும்பினார்.[12] [13] எல்லிஸ் தீவுக்கு வந்தபோது, இவர் வித்தியாசமாக பேச ஆரம்பித்தார். இவரது சகோதரரின் கூற்றுப்படி "பிரம்மாண்டத்தின் பிரமைகள்", "வியத்தகு", "பரபரப்பான" போன்றவை. [14] [15] இவர் தனது வாழ்க்கையின் இந்தப் பகுதியைப் பற்றி மை ரோட் டு இந்தியா (1939) என்ற நினைவுக் குறிப்பில் எழுதினார்.[16] [17] மேரி சுல்லி 1930களில் "நிலா கிராம் குக்" என்ற தலைப்பில் ஒரு சுருக்க உருவப்படத்தை வரைந்தார்.[18]
1939 இல், இவர் லிபர்ட்டி என்ற அமெரிக்க வார இதழுக்கு ஐரோப்பிய நிருபரானார். சூலை 1941இல் நாசிக்கள் காவலிலிருந்து தப்பித்து, தன் மகனுடன் தெகுரானுக்கு தப்பி ஓடும் வரை, கிரேக்கத்திலிருந்து இரண்டாம் உலகப் போரைப் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இவர் தெகுரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு கலாச்சார இணைப்பாளராக 1941 முதல் 1947 வரை பணியாற்றினார். அந்த சமயத்தில், குக் இசுலாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் தனிப்பட்ட திட்டத்தில் பல ஆண்டுகள் செலவழித்து, குரானை ஆங்கிலத்தில் திருத்தி மொழிபெயர்த்தார். இவர் ஈரானின் கல்வி அமைச்சகத்தில் உயர் பதவியை வகித்தார். திரைப்பட தணிக்கையை மேற்பார்வையிட்டார். மேலும் வானொலியில் தனது கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்தார். 1940களில் ஈரானில் தேசிய நாடகங்கள், நடனங்கள்,[19] ஆப்பெரா ஆகியவற்றைக் கட்டமைக்க உதவினார். ஈரானில் ஒரு அமெரிக்க வெளிநாட்டவரும், நடனக் கலைஞருமான செனியா ஜரினாவுடன் பணிபுரிந்தார்.
குக் 1954 இல் காஷ்மீரில் மீண்டும் ஆர்வம் காட்டினார். தி வே ஆப் தி ஸ்வான்: போயம்ஸ் ஆப் காஷ்மீர் (1958) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் புத்தகத்தை தொகுத்தார்.[20]
சொந்த வாழ்க்கை
[தொகு]1927 இல், 18 வயதில், நில்லா கிராம் குக் கிரேக்கக் கவிஞரும் அரசாங்க அதிகாரியுமான நிகோஸ் புரோசுதோபொலோசை மணந்தார். இவர்களுக்கு செரியோசு நிக்கோலசு (சிரியஸ் குக் என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற ஒரு மகன் உள்ளார். [21] இவர்கள் 1932இல் விவாகரத்து பெற்றனர். பின்னர் இவர் மீண்டும் 1934இல் ஆல்பர்ட்டு நதானியேல் அட்சின்சை திருமணம் செய்து கொண்டு சிலகாலம் வாழ்ந்தார். [22] ஆனால் இந்தத் திருமணமும் ரத்து செய்யப்பட்டது.[23] [24]
இறப்பு
[தொகு]குக் 1965இல் தனது மகனுடனும் உறவினர்களுடன் கிரேக்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் 1982 இல் தனது 74 வயதில் ஆஸ்திரியாவின் நியூன்கிர்ச்சனில் இறந்தார். இவரது கல்லறை கிரேக்கத்தின் டெல்பி நகரில் இவருடைய தந்தையின் கல்லறைக்கு அருகில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ Deloria, Philip J. (2019-04-16). Becoming Mary Sully: Toward an American Indian Abstract (in ஆங்கிலம்). University of Washington Press. pp. 78–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-74524-4.
- ↑ Barker, Ama (1933-12-03). "Too Much Cleopatra Turns U. S. Girl from Gandhi to Whoopee". Daily News: pp. 257. https://www.newspapers.com/clip/59499083/too-much-cleopatra-turns-u-s-girl/.
- ↑ "INDIA: INDIA Runaway Disciple" (in en-US). 1933-12-11. http://content.time.com/time/magazine/article/0,9171,746483,00.html.
- ↑ Kapoor, Pramod (2017-10-24). Gandhi: An Illustrated Biography (in ஆங்கிலம்). Running Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-316-55416-9.
- ↑ "American Girl Accepts Hinduism". July 25, 1932. https://archive.org/details/dli.granth.866/page/n5/mode/2up?q=Nila+Cram+Cook.
- ↑ "Nila Nagini Disappears". October 17, 1933. https://archive.org/details/dli.granth.1160/page/12/mode/2up?q=Nila+Cram+Cook.
- ↑ "Nila Nagini Staying at Muttra?". October 20, 1933. https://archive.org/details/dli.granth.1163/mode/2up?q=Nila+Cram+Cook.
- ↑ "'Morbid Girls Not to Gandhiji's Taste'". December 2, 1934. https://archive.org/details/dli.granth.8922/page/12/mode/2up?q=Nila+Cram+Cook.
- ↑ "NEUROTIC NILA". 1934-02-18. http://nla.gov.au/nla.news-article198234015.
- ↑ "Gandhi's Disciple Without a Home". January 11, 1934. http://www.manchesterhistory.org/News/Manchester%20Evening%20Hearld_1934-01-11.pdf.
- ↑ "Nila Nagini Better". January 10, 1934. https://archive.org/details/dli.granth.1225?q=Nila+Cram+Cook.
- ↑ "Nila Cram Cook to Get Her Son." (in en-US). 1934-01-14. https://www.nytimes.com/1934/01/14/archives/nila-cram-cook-to-get-her-son.html.
- ↑ "BEAUTIfUL WOMAN". 1934-02-14. http://nla.gov.au/nla.news-article143587356.
- ↑ McCoy, Homer (1934-03-24). "Nila Cram Cook Returns to U. S. -- Dramatically". https://www.newspapers.com/clip/5782727/nila-cram-cook-detained-on-ellis-island/.
- ↑ "NILA GRAM COOK AND HER SON HERE; Former Disciple of Mahatma Gandhi Talks Volubly of 'Sunshine in Athens.' BOY SENT TO ELLIS ISLAND He Later Is Released in the Custody of Uncle -- Plans for Future Obscure." (in en-US). 1934-03-25. https://www.nytimes.com/1934/03/25/archives/nila-gram-cook-and-her-son-here-former-disciple-of-mahatma-gandhi.html.
- ↑ Cook, Nilla Cram (1939). My Road to India (in ஆங்கிலம்). L. Furman, Incorporated.
- ↑ "Books of this Week". 1939-09-22. https://www.newspapers.com/clip/59516022/books-of-this-week/.
- ↑ Deloria, Philip J. (2019-04-16). Becoming Mary Sully: Toward an American Indian Abstract (in ஆங்கிலம்). University of Washington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-74524-4.Deloria, Philip J. (2019-04-16). Becoming Mary Sully: Toward an American Indian Abstract. University of Washington Press. pp. 78–82. ISBN 978-0-295-74524-4.
- ↑ Cook, Nilla Cram (1949). "The Theater and Ballet Arts of Iran". Middle East Journal 3 (4): 406–420. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-3141. https://www.jstor.org/stable/4322114.
- ↑ Pandita, S. N. (August 28, 2015). "Nilla Cram Cook : The Maverick Genius". Early Times Newspaper Jammu Kashmir. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Senate, United States Congress (May 10, 1950). Report on a Bill for the Relief of Sirius Proestopoulos (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. pp. 1–2.
- ↑ "Nila Nagini Weds Chicago Writer". March 28, 1934. https://archive.org/details/dli.granth.1308?q=Nila+Cram+Cook.
- ↑ "Nila C. Cook's Romance Ends". https://archive.org/details/victoriadailytimes19340416/page/n5/mode/2up?q=Nila+Cram+Cook.
- ↑ "'GODDESS' SUES". 1934-09-22. pp. 14. http://nla.gov.au/nla.news-article75995738.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Nila Cram Cook Takes First Flight" (1934), photograph in the Lammot du Pont, Jr. collection of aeronautical photographs, Hagley Museum and Library in Delaware.